அனைத்து இஸ்லாமியர்களும் OBC பட்டியலில் சேர்ப்பு.!! NCBC அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மக்களவைப் பொதுத் தேர்தலில் அனைத்து சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு மற்றும் சாதியவாரிய கணக்கெடுப்பு விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த சாத்தியமில்லை என மத்திய பாஜக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. 

அதன் முதற்கட்டமாக காங்கிரசாலும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் தரவுகளின் படி மாநில அரசின் கீழ் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க கர்நாடக மாநில முஸ்லிம்களின் அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்கள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

கர்நாடக மாநில அரசின் தரவுகளின் படி அனைத்து முஸ்லிம்களும் இதர பிற்படுத்தப்பட்டவர்களாக வகை II-Bன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்த சூழலில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All Muslims are included in the OBC list in Karnataka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->