பழமையான திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதிக்கிறது - அமித்ஷா.!
Amithsha tweet about Congress in senkol
புதிதாக திறக்கப்பட உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் நிறுவுப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இதனிடையே செங்கோல் குறித்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில் செங்கோல் விவகாரத்தில் காங்கிரசின் கருத்தை விமர்சித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் கட்சி ஏன் புறக்கணிக்கிறது. நேருவுக்கு தமிழகத்தின் சைவ மதத்தால் வழங்கப்பட்ட செங்கோலை ஊன்றுகோலாக்கியது காங்கிரஸ் என தெரிவித்துள்ளார்.
மேலும் பழமையான திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாகவும், ஆதினத்தின் வரலாற்றை போலியான காங்கிரஸ் தெரிவிப்பது அவர்களின் நடத்தையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
Amithsha tweet about Congress in senkol