தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி.. கேரளாவுக்கு "தேசிய பாதுகாப்பு படை" அனுப்பிய அமித்ஷா !! - Seithipunal
Seithipunal


கேரளாவில் முக்கிய பகுதியான எர்ணாகுளம் அருகே சுமார் 2500 பேர் கலந்து கொண்ட வருடாந்திர கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் இன்று காலை 9:30 மணி அளவில் 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்த சம்பவத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பலர் கவலைக்கிடமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கு உதவும் வகையில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு படை கேரளாவுக்கு செல்லுமாறு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே வெடிகுண்டு சம்பவம் அரங்கேறிய இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் 8 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படை டெல்லியில் இருந்து விரைந்துள்ளது. இந்தக் குழு இன்று மாலைக்குள் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AmitShah sent national security guard to Kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->