விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக்குவதே எங்களுடைய இலக்கு - அமுல் நிறுவனம் தகவல்.! - Seithipunal
Seithipunal


அமுல் எனப்படும் ஆனந்த் பால் தொழிற்சங்கம் லிமிடெட்  அடுத்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து, அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் வியாஸ் தெரிவித்ததாவது, 

"கால்நடைகளின் விந்து மற்றும் கரு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கறவை மாடு மற்றும் எருமை இனங்களை மேம்படுத்தி வருகிறோம். இதனால், தொழில்துறையினர் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். 

தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், பால் உற்பத்தியிலும் மரபியல் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், எதிர்கால கால்நடைகள் அதிக மரபியல் கொண்டதாக இருக்கும். இது அதிக பால் உற்பத்திக்கு உதவுவதுடன், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

ஒரு பசு ஒரு நாளைக்கு சராசரியாக 7-8 லிட்டர் பால் தருகிறது, ஆனால், தற்போது மேலும் 4 லிட்டர் அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு பால் உற்பத்திச் செலவைக் குறைப்பதே எங்களுடைய அடிப்படைக் கருத்தாக உள்ளது. விவசாயிகள் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினர். 

ஆனால், அதிக மாடுகளை வளர்க்காமல் உயர் ரக மாடுகளை வளர்த்து, ஐந்து பசுக்களில் இருந்து பத்து மாடுகளுக்கு சமமான பால் கறப்பதற்கு, புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளும் பின்பற்றி வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amul company aims to farmer income double


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->