அரசியலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக நடிகர் விஜய் வருவார் என்பதில் நம்பிக்கை இல்லை; பெ.சண்முகம் பேட்டி..!
P Shanmugam says he is not confident that actor Vijay will replace DMK and AIADMK in politics
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இவர் இந்த கல்லூரியின் பழைய மாணவராவார். இந்த விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லி மாநில தேர்தல் முடிவுகள் வருத்தம் அளிக்கிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இந்தியா கூட்டணி இதனை உணர வேண்டும். மீண்டும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதுபோல பிற மாநிலங்களில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அங்கெல்லாம் இந்தியா கூட்டணி வலுப்பெற வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கான முயற்சியை மேற்கொள்ளும். தமிழக அரசியலில் பல பிரபலங்கள் வந்து சென்றுள்ளனர்.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளை விரும்பாதவர்கள் நடிகர் விஜய்யை ஆதரிக்கலாம். ஆனால், தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.
English Summary
P Shanmugam says he is not confident that actor Vijay will replace DMK and AIADMK in politics