3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த கொடூர இளைஞன் கைது! - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேசத்தில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.

திருப்பதி மாவட்டத்தில், 22 வயதான இளைஞர், தனது உறவினரின் 3 வயது குழந்தையை மிட்டாய் வாங்கிக் கொடுத்து, தன்னுடன் அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் குழந்தையை கொலை செய்து, உடலை எரித்து உள்ளார்.

இதற்கிடையே, குழந்தை காணாமல் போனதை அறிந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் தகவல் சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், குழந்தையைக் கொலை செய்ததை இளைஞர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து காவல்துறை அவரைக் கைது செய்து, தற்போது காவலில் வைத்துள்ளது. இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra 3 years old child Abused and hacked to death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->