அதிரடி காட்டும் சந்திரபாபு! வீடு தேடி சென்று உதவித்தொகை! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையை வீடுக்கு சென்று ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையை ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இந்தநிலையில் மாதந்தோறும் வீடுகளுக்கே உதவி தொகை வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டத்தை நேற்று அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது குண்டூர் மாவட்டம் மங்களகிரி பகுதியில் ஒரே வீட்டில் முதியவரும் அவருடைய விதவை மகளும் வசித்து வருகின்றனர். இதனை அறிந்த சந்திரபாபு நாயுடு அவர்களது வீட்டுக்கு சென்று தேநீர் அருந்தி உதவித்தொகை வழங்கிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும் ஏழ்மை காரணமாகவும் வீடு கட்ட முடியவில்லை. எனவே வீடு கட்டி தர வேண்டும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு 3.8 சென்ட்  நிலத்தில் வீடு கட்டி தரப்படும் என உறுதி அளித்தார்.

சந்திரபாபு நாயுடு சிறுவர்களே அரவணைத்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் கல்வி செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார். இதனைக் கேட்டதும் அவர்கள் கண்ணீர் மல்க சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Cm Chandrababu Naidu visited the house and distributed the widow allowance


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->