தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில்; பெண்கள் 02 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்; ஆந்திர முதல்வர் அதிரடி..!
Andhra Pradesh Chief Minister insists that women should have 02 children
ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது 02 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அத்துடன், இதுபற்றி நாம் பேச வேண்டிய தருணம் என்று கூறி, மக்கள் தொகை மேலாண்மை பற்றி சில விசயங்களை சட்டசபையில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில்; கிராமங்கள், தொகுதிகள் என அனைத்து மட்டங்களிலும் இதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்று ஊக்குவித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால் வருங்காலத்தில் உங்களுடைய வீடுகளை நாங்கள் கண்காணிக்க வேண்டி வரும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட அவையில் சிரிப்பொலி எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு நாயுடு நாட்டில் பிறப்பு விகிதம் பற்றி அவர் குறிப்பிடுவது இது முதன் முறையல்ல. கடந்த ஜனவரியில், இந்தியாவில் பிறப்பு விகிதங்கள் சரிவது பற்றி அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும், தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் செய்த தவறில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தார்.ஏனெனில், அந்நாடுகளில் பிறப்பு விகிதங்கள் பெருமளவில் குறைந்து வருகின்றன.
அத்துடன் இனிவரும் காலங்களில், 02 குழந்தைகளை பெற்றவர்களே இனி பஞ்சாயத்து தலைவர், நகராட்சி கவுன்சிலர் அல்லது மேயராக முடியும். அவர்களே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வகை செய்ய சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், நாட்டின் சராசரி பிறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது, தென்னிந்திய மாநிலங்களில் பிறப்பு விகிதம் பெரிதும் சரிந்து காணப்படுகிறது. இதில், ஆந்திர பிரதேசமும் அடங்கும். தேசிய சராசரி பிறப்பு விகிதம் 2.1 ஆக உள்ள சூழலில், ஆந்திராவில் 1.6 ஆக உள்ளது.
English Summary
Andhra Pradesh Chief Minister insists that women should have 02 children