படகு இல்ல இடத்தில் ''கட்சி அலுவலம்''... ஒன்றுகூடிய தொண்டர்கள்! ஆந்திர அரசியலில் பரபரப்பு.!
Andhra Pradesh Jagan Mohan reddy party office demolition
ஆந்திரா, குண்டூர் சீதா நகரில் குடிநீர் வாய்க்கால் வாரியத்திற்கு சொந்தமாக இருந்த படகு இல்லம் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இடிக்கப்பட்டு அங்கு பிரம்மாண்ட முறையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டுமான பணிக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கட்சி அலுவலகத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கட்சி அலுவலகத்தை இடிக்க தடை உத்தரவு பிறப்பித்தார்.
இருப்பினும் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களை கொண்டு கட்சி அலுவலகத்தை இடித்தனர்.
அப்போது அங்கு குவிந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
Andhra Pradesh Jagan Mohan reddy party office demolition