#BREAKING :: ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய ஆந்திர மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் சசிகலா என்ற மாணவி ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்பொழுது ரயில் கதவு பின்புறம் பலமாக மோதியதில் எதிர்பாராதவிதமாக சசிகலா கீழே விழுந்தார். ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி சசிகலா பல மணி நேரமாக அவதிப்பட்டு வந்தார். 

ரயில்வே மீட்புக் குழுவினர் பிளாட்பாரத்தை உடைத்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவருக்கு ஏற்கனவே கடுமையான உள் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

ரயில்வே நடைமேடையை உடைத்து அவரை காப்பாற்றிய போது சிறுநீர்ப்பை மற்றும் இடுப்பு எலும்பு கடுமையாக சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது. 

இதனால் அவருக்கு கடுமையான உள் காயத்துடன் இரத்தப்போக்கு ஏற்பட்டது. மாணவி ஷீலா நகர் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சசிகலாவின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளார். சசிகலா துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்.சி.ஏ படித்து வருகிறார். சசிகலா இறந்ததால் அவரின் பெற்றோர்களும் கல்லூரி நண்பர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra student trapped between train and platform died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->