பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வழக்கு! உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
A case of trespassing against a schoolgirl Assistant Jailer suspended
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றிய பாலகுருசாமி, கடந்த சில தினங்களுக்கு முன், சிறையிலிருந்த கைதியின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு, கைதியின் 14 வயது பேத்தியின் செல்போன் எண்ணை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்பின்னர், பாலகுருசாமி மாணவியை தனியாக அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டகண்ட மாணவியின் சித்தி, நடுரோட்டில் பாலகுருசாமியை தாக்கியதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் பாலியல் தொல்லை புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் இடையே, பொதுமக்கள் மத்தியில் அரசு அதிகாரியை தாக்கியது தொடர்பாக மாணவியின் குடும்பத்தினரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதால் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிர கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
English Summary
A case of trespassing against a schoolgirl Assistant Jailer suspended