எட்டு பேர் பலி! பெரும் இழப்பு! அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு!
Andhra Telangana Heavy Rain Hyderabad All School Leave
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, மழை வெள்ளத்தால் எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மகபூபாபாத் - கேசமுத்திரம் இடையேயான ரயில் தண்டவாளம் நீரில் அடித்து செல்லப்பட்டது.
உடனடியாக களத்தில் இறக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக ஹைதராபாத் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே, குஜராத் மாநிலம் வதோதராவில் செப்டம்பர் 2 முதல் 4 வரை அதிகனமழை (மஞ்சள் எச்சரிக்கை) பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருச் மற்றும் நர்மதா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், தெற்கு மற்றும் மத்திய குஜராத்தை ஒட்டிய சவுராஷ்டிராவில் அகமதாபாத் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்.4ம் தேதி : தெற்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் பகுதி, ஆனந்த் மற்றும் பருச் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Andhra Telangana Heavy Rain Hyderabad All School Leave