ஆந்திராவில் இரு துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட பெண்! பாதி உடலை தேடும் போலீசார்!
Andhra Woman Murder case
ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனகபள்ளி மாவட்டம், பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே, பெண்ணின் உடலின் ஒரு பகுதி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
35 முதல் 40 வயதுடைய அந்த பெண்ணின் உடல் இடுப்புக்கு கீழே துண்டிக்கப்பட்டு, படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டு பாலத்திற்கு அருகே வீசப்பட்டிருந்தது.
பெண்ணின் மேல் பகுதியை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
இது தனிப்பட்ட விரோதத்தால் நடந்த கொலையா அல்லது ஏதேனும் மோசடி, குற்றச்செயல்களுடன் தொடர்புடையதா என்பதையும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.