52 வயது ஆந்திர பெண் 5 நாட்களில், 150 கி.மீ., துாரம் வரை நீந்தி புதிய சாதனை! - Seithipunal
Seithipunal


​ஆந்திராவை சேர்ந்த 52 வயதான பெண், 150 கி.மீ., துாரம் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

ஆந்திராவின் காக்கி நாடா மாவட்டத்தில் உள்ள சமரி கோட்டா கிராமத்தில் வசித்து வருபவர் கோலி ஷியாமளா, 52 வயதான  இவர், விசாகப்பட்டினத்திலிருந்து காக்கி நாடா வரை 150 கி.மீ. துாரம் நீந்தி பயணித்துள்ளார்.

இவர், இந்த சாதனையை 05 நாட்களில் செய்து முடித்துள்ளார். ஒரு நாளைக்கு 30கி.மீ, துாரம் பயணம் என்ற கணக்கின் அடிப்படையில் 150 கி.மீ.,தொலைவு சென்றுள்ளார்.

ஷியாமளாவின் இந்த லட்சிய பயணத்தை, டிச.28 ஆம் தேதி ஆரம்பித்தார். இந்த நீச்சல் பயணத்தை, கோரமண்டல் ஒடிசி பெருங்கடல் நீச்சல் அமைப்பு கண்காணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஷியாமளாவுடன் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் உட்பட 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக குழு, உடன் பயணித்து,  அவருக்கு தேவையான உதவிகள் செய்தது, பாதுகாப்பை உறுதி செய்தனர்.

அத்துடன், ஷியாமளாவின் குறித்த நீச்சல் பயணம் நிறைவடைந்தவுடன் ,பெத்தபுரம் எம்.எல்.ஏ., சின்னராஜப்பா மற்றும் காக்கி நாடா நகராட்சி கமிஷனர் பாவனா வசிஷ்டா உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra woman sets new record by swimming 150 km in 5 days


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->