தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியின் சரித்திர படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!
New poster of Dhanush and Mari selvaraj historical film released
இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து சரித்திர கதையில் படம் ஒன்றை இயக்க உள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளது.
இந்த நிலையில், இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'D56' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ், ''இது தான் என்னுடைய கனவு படம்" என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தனுஷ் 'இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மெயின்' படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
New poster of Dhanush and Mari selvaraj historical film released