பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் புதிய அப்டேட் நாளை..!
Prashanth Neel and Jr NTR new update tomorrow
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடித்த தேவரா படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து,ஜூனியர் என்.டி.ஆர். பாலிவுட்டில் வார் 02 படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'என்டிஆர்31' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தினை நந்தமுரி தரகா இராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், நாளை மதியம் 12.06 மணியளவில் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Prashanth Neel and Jr NTR new update tomorrow