புதுச்சேரியில் பரபரப்பு - பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை - 14 பேர் கைது.!!
14 peoples arrested for harassment in puthuchery
புதுச்சேரி மாநிலத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர்.
ஆனால், அன்றைய தினம் இரவே இரண்டு மாணவிகளும் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் சோர்வாக இருந்துள்ளனர். இதையறிந்த போலீசார் அந்த மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தியபோது மாணவிகள் இருவரையும் புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்துள்ள குருசுக்குப்பத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி ராஜூ என்ற புஷ்பராஜ், வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் மணி என்ற மணிமாறன் உள்ளிட்டோர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2-ந்தேதி இருவரையும் கடற்கரை பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதேபோல், 10-க்கும் மேற்பட்டோர் அந்த 2 மாணவிகளிடம் தனித்தனியாக பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மாணவிகள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் மாணவிகள் இருவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ராஜூ, மணிமாறன் உள்ளிட்ட இரண்டு பேரையும் நேற்று கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 பேர் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
English Summary
14 peoples arrested for harassment in puthuchery