ஆளும் கட்சியை விட்டு விலகும் எம்எல்ஏ - பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வெற்றிபெற்று ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த மங்கலகிரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ராமகிருஷ்ண ரெட்டி கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், "பேரவைத் தலைவரை நேரில் சந்திக்க முடியாததால் அவரது அலுவலகத்தில் எனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டேன். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி விட்டேன். 

இத்தனை நாட்கள் எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவி விலகலுக்கானக் காரணத்தை விரைவில் தெரிவிப்பேன். கடந்த 1995-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் உள்ளேன். 

காங்கிரஸில் இருந்த காலகட்டத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தலைமையில் கடுமையாக உழைத்தேன். சில நேரங்களில் உரிய அங்கீகாரம் கிடைக்காத போதும் கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வந்தேன். 

ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று அவரது கட்சியில் இணைந்தேன். தற்போது சில சூழ்நிலைகள் காரணமாக கட்சியில் இருந்து விலகிவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார். ஆந்திராவில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எம்எல்ஏ ஒருவர் விலகியிருப்பது முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira mla ramakrishna reddy resign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->