பஞ்சாப் : கால்வாயில் மூழ்கிய இளம்பெண்ணை காப்பாற்றிய ராணுவ வீரர் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!!
army man save young woman drowing bhakra canal in punjap
கால்வாயில் மூழ்கிய இளம்பெண்ணை காப்பாற்றிய ராணுவ வீரர் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரத்தில் உள்ள பக்ரா கால்வாய் நீர்ப்பாசனத்திற்கு பெருமளவில் உதவுகிறது. இந்த கால்வாயில் இளம் பெண் ஒருவர் மூழ்கியுள்ளார். அவரை ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் "ஆர்ப்பரித்து பெருக்கெடுத்தோடும் பக்ரா கால்வாயில், மூழ்கும் ஒரு இளம் பெண்ணை வீரர் டி.என். கிருஷ்ணன் குதித்து காப்பாற்றுகிறார்.
அவரின் அழிக்க முடியாத மன உறுதிக்கு பாராட்டுக்கள். எப்பொழுதும் நாங்கள் நாட்டின் சேவைக்காக இருக்கிறோம்'' என்றுக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அந்த ராணுவ அதிகாரிக்கு வணக்கம் செலுத்தி பாராட்டி வருகின்றனர்.
இந்திய ராணுவம் தனது குடிமக்களை பாதுகாப்பதில் இருந்து எந்தப் பேரிடர்களின் போதும் முன்னணியில் இருந்த போதோ அல்லது மக்களைக் காப்பாற்றும் போதோ ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்பது இந்த வீடியோவின் மூலம் மீண்டும் புலனாகியுள்ளது.
English Summary
army man save young woman drowing bhakra canal in punjap