பட்ஜெட் 2025; வெளிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பூடானுக்கு முதலிடம்; இலங்கைக்கும் அதிகரிக்கப்பு..! - Seithipunal
Seithipunal


2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் எந்தெந்த வெளிநாடுகளுக்கு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இந்த பட்ஜெட்டில் பூடான், இலங்கைக்கு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பட்ஜெட்டில் வெளியுறவு அமைச்சகத்துக்கான ஒட்டு மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.20,516 கோடி என்றும், இதில் வெளிநாடுகளுக்கு உதவி வழங்குவதற்கு ரூ.5,483 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, சாலைகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2025-2026 ஆம் ஆண்டில் ரூ.2,150 கோடியைப் பெற்று, பூடானுக்கு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு உதவி பெறும் நாடாக பூடான் தொடர்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.2,068 கோடியை விட அதிகமாகும்.

அத்துடன், மாலத்தீவுகளுக்கான இந்தியாவின் ஒதுக்கீடு ரூ.400 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ரூ.200 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2025-0226 ஆம் ஆண்டில் ரூ.100 கோடியாகக் குறைந்துள்ளது.

மேலும், மியான்மருக்கு 2024-2025 பட்ஜெட்டில் ரூ.250 கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2025-2026 ஆம் ஆண்டுக்கு ரூ.350 கோடியாக அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து, நேபாளத்திற்கான தனது ஒதுக்கீட்டை இந்தியா ரூ.700 கோடியாக பராமரித்து வருகிறது. இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு ரூ.245 கோடியிலிருந்து ரூ.300 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு மத்தியில் அந்நாட்டிற்கு உதவி ரூ.120 கோடியாக மாறாமல் உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கான உதவி கடந்த ஆண்டு ரூ.200 கோடியிலிருந்து ரூ.225 கோடியாக உயர்ந்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஒதுக்கீடு ரூ.90 கோடியிலிருந்து ரூ.60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bhutan tops the list of foreign funds allocated in the 2025 budget


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->