இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா ஓய்வு!
Wriddhiman Saha retired
இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
40 வயதான சஹா, இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 1353 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் விளையாடினார்.
ஐபிஎல் போட்டிகளில் 2008 முதல் விளையாடி வரும் சஹா, இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்கவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி, அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
ரஞ்சி கோப்பை போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் போதே தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனது கடைசி சீசனாக இது இருக்கும் என்றும், பெங்கால் அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.