ஓடும் ரயிலில் மேலிருந்து சொட்டிய தண்ணீர் - கையும் களவுமாக சிக்கிய ராணுவ வீரர்.!
army man urinated to woman passenger in train
நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து சத்தீஷ்கார் மாநிலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் ஒருவர், தன்னுடைய 7 வயது குழந்தையுடன் படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். அவருக்கு கீழ் அடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் தாயும், மகளும் நன்கு தூங்கி கொண்டிருந்தார்கள்.
மேல் படுக்கையில் ராணுவ வீரர் ஒருவர் படுத்து இருந்தார். இதையடுத்து ரெயில் குவாலியர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென மேல் படுக்கையில் இருந்து கீழே தண்ணீர் வழிந்தது. இதனால் விழித்து கொண்ட அந்த பெண், எழுந்து மேல் படுக்கையில் படுத்திருந்த ராணுவ வீரரை பார்த்தபோது அவருடைய உடை நனைந்து இருந்தது.
இதனால் குடிபோதையில் சிறுநீர் கழித்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ராணுவ வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து, தனது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் உடனே ரெயில்வே உதவி என்னைத் தொடர்புக் கொண்டு புகார் அளித்தார். அதன் படி ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர்.
ஆனால் அவர்கள் சிறுநீர் கழித்த ராணுவ வீரர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அந்த பெண் ஆன்லைனின் பிரதமர் அலுவலகத்துக்கும் ரெயில்வே அமைச்சருக்கும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சிறிதுநேரம் ரெயில் பயணிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
English Summary
army man urinated to woman passenger in train