ஆசியாவின் 02வது பெரிய இஸ்கான் கோவில்; மும்பையில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!
Asias 2nd largest ISKCON temple in Mumbai
மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
நவி மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் கட்டப்பட்ட ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இஷ்கானின் முயற்சியால், ஆன்மிகம் மற்றும் அறிவுமிக்க மண்ணில் ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவில் திறக்கப்பட்டது.
இந்த கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக் கோவிலில் பல்வேறு கடவுள்களின் சிலைகள் உள்ளன. இந்தக் கோவில், நாட்டின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கான புனித மையமாக திகழும் என்று நம்புகிறேன்.
குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பக்தர்களை தொடர்புபடுத்துவதே இதன் நோக்கமாகும். மஹாராஷ்டிரா மக்களுக்காக இந்த சிறப்புமிக்க பணிகளைச் செய்த இஸ்கான் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற இந்த அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வீட்டுக்கு வீடு கழிப்பறை, ஏழைகளுக்கு காஸ் இணைப்பு, குடிநீர் வசதி, ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை அரசு செய்து வருகிறது என மோடி அவர்கள் மேலும் கூறியுள்ளார்.
English Summary
Asias 2nd largest ISKCON temple in Mumbai