ராஜஸ்தானில் பரபரப்பு.! ரூ.10 லட்சத்துடன் ஏ.டி.எம் எந்திரத்தையே கொள்ளையடித்த மர்ம கும்பல்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.10 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள தபோக் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளியை மிரட்டி சிறை வைத்தனர்.

பின்பு பணத்தை கொள்ளையடிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரத்தையே மொத்தமாக பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். இதில் ரூ.10 லட்சம் இருந்ததாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து தபோக் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏடிஎம் எந்திரத்தையே கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ATM machine robbed with 10 lakh rupees in Rajasthan Udaipur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->