ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்;லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு பொறுப்பேற்பு..!
Attack on tourists in Jammu and Kashmir Lashkar e Taiba shadow organization takes responsibility
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியத்தில், 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக முதலமைச்சர் உள்பட அரசியலை தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ- தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Attack on tourists in Jammu and Kashmir Lashkar e Taiba shadow organization takes responsibility