உத்திரபிரதேசம் || இந்து பெண்ணை மதமாற்ற முயற்சி.! 2 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் இந்து பெண்ணை மதமாற்ற முயற்சி செய்ததாக 2 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில், திருமணமான இந்து பெண்ணை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளியின் 2 ஆசிரியைகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத மதமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரெண்டு சக்ரேஷ் மிஸ்ரா தெரிவித்ததாவது, இரண்டு ஆசிரியைகள் வீடு புகுந்து இந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தி, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக இந்து பெண் புகார் அளித்துள்ளார். 

அந்த இந்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில், நகாசா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகளையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புகார் கூறிய இந்து பெண்ணின் கணவர் கிறிஸ்தவர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempt to convert Hindu girl in uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->