ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு!
Attempt to murder case against former Andhra Chief Minister Jaganmohan Reddy
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினரை தாக்கியதாக எழுத புகாரில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவின் பூண்டி தொகுதி தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ரகுராமகிருஷ்ணராஜூ. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
இருந்தபோதிலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கைதான ரகுராமகிருஷ்ணராஜுவை முகமூடி அணிந்த மூன்று பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக அப்போது அவர் புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த சமயத்தில் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன் தினம் ரகுராமகிருஷ்ணராஜூ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பெயரில் போலீசார் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் முன்னாள் அதிகாரிகள் பிவி சுனில், ராம ஆஞ்சநேயா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு செய்திருப்பதாக ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் அட்வகேட் ஜெனரல் சுதாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Attempt to murder case against former Andhra Chief Minister Jaganmohan Reddy