தேர்தல் வாக்குறுதியால் வாழ்க்கையே போச்சு... ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்துகளில் ''யாசகம்'' எடுத்து போராட்டம்!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்துகளில் யாசகம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானாவில் அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 

அந்த மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

அதன்படி, காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முக்கிய வாக்குறுதியான மகளிர் இலவச பேருந்து திட்டத்தை அரசு நிறைவேற்றியது. 

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் தங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதன் ஒரு பகுதியாக, அரசு பேருந்துகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் யாசகம் எடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto drivers take Yasakam buses and protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->