பிறந்த 8 நாட்கள் ஆன குழந்தைக்கு ஆறாவது வார தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


பிறந்த 8 நாட்கள் ஆன குழந்தைக்கு ஆறாவது வார தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு.!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியின் எடப்பள்ளி பகுதியில் குடும்ப நல மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் பிறந்து எட்டு நாட்களேயான குழந்தைக்கு தவறுதலாக ஆறாவது வார தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால், அந்த குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து குழந்தையின் குடும்பத்தினர், குழந்தைக்கு முதல் வாரத்திற்கு பதிலாக ஆறாவது வாரத்திற்குரிய தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர். தற்போது குழந்தை எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, குழந்தையின் குடும்பத்தினர் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி கொச்சியில் உள்ள எடப்பள்ளி பகுதியில் உள்ள குடும்ப நல மையத்தில் நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க சுகாதார நிலைய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby health issue for wrong dose in kochi health centre


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->