மோசமான வானிலை- தரையிறங்காமல் சென்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டர்! - Seithipunal
Seithipunal


மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகாட் பகுதியில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மத்திய பிரதேசத்தின் பாலகாட் பகுதியில் நடைபெறும் ராணி துர்கவதி கவுரவ் யாத்திரையை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த இடத்திற்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி அமித்ஷா ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது, மத்திய பிரதேசத்தின் பாலகாட் பகுதியில் வானிலை மிக மோசமாக இருந்ததால், அந்த ஹெலிகாப்டரால் தரையிரங்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் வானிலை மிக மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அமித்ஷாவின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bad weather Amit Shah helicopter that didnt land


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->