இறைச்சி விற்பனைக்குத் தடை - மாநில அரசின் உத்தரவால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி.!!
ban non veg sales in uttar pradesh
உ.பியில் மத வழிபாட்டு தலங்களுக்கு அருகிலுள்ள இறைச்சிக்கடைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை முதல் ஏப்ரல் 6 வரை மத வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதையும், இறைச்சி விற்பனை செய்வதையும் மாநில அரசு தடை செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று பாஜக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உ.பி. மாநகராட்சி சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரித்துள்ளது.
English Summary
ban non veg sales in uttar pradesh