அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் டிரெய்லர் வெளியீடு அப்டேட்..!
Trailer release update for Ajith Good Bad Ugly
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி'. இன்னும் 09 நாட்களில் இந்த படம் வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' பாடல் வெளியாகி வைரலான நிலையில், 02-வது பாடலான 'காட் பிளஸ் யூ' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையில் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் நிலையில் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் மாதம் 03-ந் தேதி குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது.
English Summary
Trailer release update for Ajith Good Bad Ugly