டாம் ஹோலாண்டின் 'spider man 4' - டைட்டில் தெரியுமா?
Tom Holland Spider Man 4 title release
மார்வெல் படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், டாம் ஹாலண்ட் நடித்த 'ஸ்பைடர் மேன்' படங்கள்.இதன் முதல் பாகமான ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் அதனைத்தொடர்ந்து, 2-வது பாகமாக 'ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம்' படமும், கடைசியாக 3-வது பாகமாக 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படமும் வெளியாகின.

இப்படங்களில் கதாநாயகியாக ஜெண்டயா நடித்திருந்தார். இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.இதனைத்தொடர்ந்து 4-வது பாகமும் தற்போது உருவாகி வருகிறது.
இதிலும், டாம் ஹாலண்டே ஸ்பைடர் மேனாக நடிக்கிறார். மேலும், ஸ்பைடர் மேன் நோ வே ஹோமில் கேமியோ ரோலில் நடித்திருந்த 'ஆண்ட்ரூ கார்பீல்ட்' இதிலும் நடிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் ஸ்பைடர் மேன் 4-வது பாகத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அவ்வகையில் , இப்படத்திற்கு 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி உலகளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tom Holland Spider Man 4 title release