சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்! பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


சூரஜ் ரேவண்ணாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனது கட்சி தொண்டர்கள் உட்பட இரண்டு பேரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்  எச்.டி. ரெவேண்ணா எம். எல். ஏவின் மூத்த மகன் சூரஜ் ரேவண்ணா கடந்த ஜூன் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்குகள் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது. சூரஜ் ரேவண்ணாவை பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தன் மீதான பாலியல் புகார் வழக்கில் ஜாமின் கேட்டு பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் சூரஜ் ரேவண்ணா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சூரஜ் ரேவண்ணாக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாமீன் பெற்று வெளியேறி வந்த பிறகு புகார் அளித்த நபர்ககளை நேரடியாகவோ மறைமுகவோ மிரட்டக்கூடாது. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையிலும் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜார் வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore court grants conditional bail to Suraj Revanna


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->