அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளைக்கு முதல் பரிசு.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பிடித்தனர்.

காலை 6.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி, மாலை ஆறு மணியளவில் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில், 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் கே.கார்த்தி முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் நிசான் கார் மற்றும் கன்றுடன் பசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்து குன்னத்தூரை சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2-வது இடத்தையும், திருப்புவனத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் 14 காளைகளை அடக்கி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இதேபோல், சிறந்த காளையாக மலையாண்டி என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் மற்றும் கன்றுடன் பசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

மேலும், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை முதல் பரிசை வென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk sinnamma sasikala bull won first price madurai avaniyapuram jallikattu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->