மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து போராடியவர் மீது தாக்குதல்.! பெரும் பரபரப்புக்கு.!
bangalore Rakesh Dikaitpress conference attacked some mysterious people
கர்நாடக மாநிலம் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய ராகேஷ் திகாய்த் இன்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது, திடீரென வந்த சிலர் மர்ம நபர்கள் ராகேஷ் திகாய்த் மீது மை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரும் பொருட்டாட்டத்தை விவசாயிகள் நடத்தி, அதில் வெற்றியும் கண்டனர்.
இந்த தொடர் போராட்டத்தில் விவசாயிகளின் முகமாக இருந்தவர்களில் ஒருவர் ராகேஷ் திகாய்த். இவர் இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஒருவர் பணம் கோரிய ரகசிய வீடியோ குறித்து ராகேஷ் திகாய்த் பேச இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதன்படி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, திடீரென வந்த சில மர்ம நபர்கள், ராகேஷ் திகாய்த் மீது மைக் வீசியும், கருப்பு மை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, ராகேஷ் திகாய்த் ஆதரவாளர்கள் மர்ம நபர்கள் மீது தாக்குதல் நடத்த, கலவரமாகியது. இரு தரப்பினரும் நாற்காலிகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்துப் பேசிய ராகேஷ் திகாய்த், "கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. இது கர்நாடக மாநில காவல்துறையின் தோல்வி. மிகப்பெரிய இந்த சதித்திட்டம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
bangalore Rakesh Dikaitpress conference attacked some mysterious people