அடித்தே கொலை செய்யப்படும் இந்து மக்கள்! இந்தியாவிலும் நடக்கும்! காங்கிரஸ் கட்சிக்கு துணை குடியரசு தலைவர் கடும் கண்டனம்!
Bangladesh Hindu Issue Congress Statement
வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவிலும் நடக்கலாம் என்று, காங்கிரஸ் கூறிய கருத்துக்கு துணைக் குடியரசுத் தலைவர் ஜககீத் தன்கர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாட்டில், அந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர் நீத்த வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்நாட்டில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. தற்போது இடைக்கால அரசு ராணுவத்தின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆட்சி கவிழ்ப்புக்கு பின் வங்கதேச நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை இன மக்களாக உள்ள கிறிஸ்தவர்கள், இந்து மக்கள் மீது, பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியர்கள் கொடூர தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இந்து கோவில்களும், இந்து மக்களின் உடைமைகளும், வீடுகளும் சூறையாடப்பட்டு, சிலர் நடுத்தெருவில் அடித்து கொலை செய்யப்பட்ட காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அந்நாட்டில் 205 இடங்களில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், வங்காளதேசத்தில் நடப்பது போல இந்தியாவிலும் நடக்கலாம் என்று தெரிவித்தது கண்டனத்தையும், சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர், சசி தரூர் போன்றவர்களும் வங்கதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சில கருத்துக்களை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் இந்த கருத்துக்கு இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜககீத் தன்கர் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பவள விழாவில் இது குறித்து பேசிய ஜககீத் தன்கர், நம் மக்கள் எச்சரிக்கையோடு இருங்கள். அண்டை நாட்டில் நடப்பது போல் நம்முடைய நாட்டிலும் நடக்கும் என்ற பிம்பத்தை தேசவிரோதிகள் உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
நம் நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எப்படி இவர்களால் இப்படி பேச முடிகிறது? இந்த தேச விரோத சக்திகள் அரசியலமைப்பை பயன்படுத்தி நாசக்கார வேலைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது" என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து, எச்சரிக்கையும் விடத்துள்ளார்.
English Summary
Bangladesh Hindu Issue Congress Statement