இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற வங்க தேசத்தினர்! 4 பேர் கைது! - Seithipunal
Seithipunal


மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதிகள் வழியாக  6 நபர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதனைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கி அவர்களை ரதச்சேரா பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.

பாதுகாப்புப் படையினர் விசாரணையில் அவர்களில் நான்கு பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், இரண்டு பேர் உள்ளூர் வாசிகள் அவர்கள் எல்லையைக் கடக்க உதவி செய்ததும் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள்  உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வங்காள தேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டப் பலரும் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வர முயற்சிப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்தது. 

இந்தியாவிற்கு வங்க தேசத்தினர் வருவதையொட்டி எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladeshis who tried to infiltrate into India! 4 arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->