அதிக வாகன நெரிசல் நகரம் - இரண்டாம் இடம் பிடித்த பெங்களூர்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-ம் ஆண்டு டாம் டாம் என்ற தனியார் நிறுவனம் வாகன நெரிசல் அதிகம் உள்ளம் நகரம் குறித்து ஆய்வு நடத்தியது. தற்போது, அந்த நிறுவனம் அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகிறது. இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

பெங்களூருவின் மத்திய பகுதியில் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 29 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகிறது. இதேபோல், டெல்லி நகரம் 34-வது இடத்திலும், மும்பை 47-வது இடத்திலும் உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான வாகன நெரிசல் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த பெங்களுரு தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி பெங்களூரில் மிக அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

banglore city second place most congested city in world


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->