மீண்டும் வெடிக்கும் வடகலை, தென்கலை பிரச்சனை - சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் மோதல்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை உள்ளிட்ட இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை நேரத்தில் நடைபெற்ற சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பிரபந்தம் பாடுவதில் தென்கலை மற்றும் வடகலை பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. 

கோவிலில் தென்கலை பிரிவினரே திவ்ய பிரபந்தம் பாடுவதற்கு முன்னுரிமை பெற்றிருக்கின்ற நிலையில் திடீரென அங்கு வந்த வடகலை பிரிவினர் நாங்களும் பாடுவோம் என்று வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறை மற்றும் கோவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் பாட அனுமதித்தனர். இருப்பினும் பிரச்சனை செய்தவர்களை கோவிலில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadakalai thenkalai issue in kanchipuram temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->