விக்கிரவாண்டி தனியார் பள்ளி சிறுமி மர்ம மரணம்: கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்!
vikravandi case chennai hc order
விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்ட மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில், கழிப்பிட தொட்டியில் எல்கேஜி மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் தந்தை புகார் அளிக்க, போலீசார் சந்தேக மரணம் மற்றும் அஜாக்கிரதை ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்த மூவரின் வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், கனமழை காரணமாக தொட்டி பராமரிக்கப்படாததாலும் குழந்தை வழிமாறிச் சென்றதாலும் இந்த துயர சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.
விசாரணைக்கு பிறகு, நீதிபதி மூவருக்கும் சென்னையில் ஒரு வாரம் தங்கி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மேலும், பள்ளி நிர்வாகம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையில் உள்ளதால் ஜாமின் வழங்க கூடாது என்று காவல்துறை வாதிட்டும் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
English Summary
vikravandi case chennai hc order