Pinarayi Vijayan: நிவாரணத் தொகையில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் - கேரள முதலமைச்சர் கடும் கண்டனம்!
Banks that deducted EMI from the relief amount - Kerala Chief Minister strongly condemned!
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி வயநாட்டில் பயங்கர பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் EMI பிடித்தம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகள் EMI பிடித்தம் செய்ததற்கு மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், "நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
English Summary
Banks that deducted EMI from the relief amount - Kerala Chief Minister strongly condemned!