நாய்கள் ஜாக்கிரதை!ஒடிசாவில் தினசரி 777 பேர் பாதிப்பு! இதுவரை 5.20 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன! - அரசு தகவல்! - Seithipunal
Seithipunal


ஒடிசா சட்டசபை கூட்டத்தில் இன்று, 2023 முதல் 2024 அக்டோபர் வரை ஒடிசாவில் 5.20 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மாநில அரசு தரவுகள் வெளிப்படுத்தின. அதாவது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 77 நபர்களே நாய் கடி பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ கத்ரகா அப்பலா சுவாமியின் கேள்விக்கு, மீன்வளம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோகுலானந்த மல்லிக் பதில் அளித்தார். அவர் கூறியபடி, "22 மாதங்களில் மொத்தம் 5,20,237 நாய் கடி சம்பவங்கள் ஒடிசாவில் பதிவாகியுள்ளன.

" 2023ம் ஆண்டில் 2,59,107 சம்பவங்கள் பதிவாகியிருந்தது, அதன்பின் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 33,547, 32,561 மற்றும் 29,801 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டில் நடத்திய கால்நடை கணக்கெடுப்பின் படி, ஒடிசாவில் 17.34 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதி 2023" படி, நகராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் மல்லிக் கூறினார்.

2022-23 நிதியாண்டில் ஒடிசாவின் எட்டு நகர்ப்புறங்களில் 4,605 தெருநாய்கள் கருத்தடை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beware of dogs 777 people are affected daily in Odisha So far 5 20 lakh dog bite incidents have been reported Government Information


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->