நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், மேலும் ஒரு மாணவன் பலி! கடந்த 6 மாதங்களில் 12 பேர் பலி! அதிரும் பீகார்! - Seithipunal
Seithipunal


பீகார் : சமஸ்திபூர் மாவட்டம், கோட்டா பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (வயது 21). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நீட் தேர்வு எழுதி வந்தார்.

அதுபோல, இந்த ஆண்டும் ரோஷன் நீட் தேர்வு எழுதியுள்ளார். அண்மையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 720 மதிப்பெண்ணுக்கு 400 மதிப்பெண்கள் மட்டுமே ரோஷன் எடுத்துள்ளதாக தேர்வு முடிவு தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று, தான் எடுத்த இந்த குறைந்த மதிப்பெண்ணுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது என்று, சோகத்தில் இருந்த ரோஷன், தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ரோஷனின் அறைக்கு அவரின் சகோதரர் சுமன் வந்த போது, ரோஷன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல்அறிந்து வந்த போலீசார், ரோஷனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரோஷனின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீகார் மாநிலம், கோட்டா பகுதியில் கடந்த 6 மாதங்களில் நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும்​ தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar NEET student suicide issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->