'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..? படக்குழுவினர் தகவல்..?
Vanagan' film release date changed
அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.அத்துடன் படத்தில் சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, பொங்கல் பண்டிகையில் 'விடாமுயற்சி, கேம் சேஞ்சர்' உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன.
அதனால், வணங்கான் படத்திற்கு திரைகளில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்ய உள்ளதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Vanagan' film release date changed