விஜயகாந்த் நினைவு நாள் - சிறப்பு போஸ்டரை வெளியிட்ட அலங்கு படக்குழு.!
alangu movie team released special poster for vijayakant memorable day
பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்தின் நினைவிடத்தில் தொண்டர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தை நினைவுக்கூரும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை 'அலங்கு' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் "எனக்கு எல்லா உசுரும் ஒன்னு தான்" என்ற வசனம் இடம் பெற்றிருந்தது.
இயக்குனர் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான அலங்கு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
English Summary
alangu movie team released special poster for vijayakant memorable day