விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சி ரத்து - காரணம் என்ன?
vijay antony 3.0 music concert cancelled
இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர் விஜய் ஆண்டனி. இவர் காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சி, வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்சிக்கலான தேதி விரைவில் அறிவிக்கப்படும். புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
vijay antony 3.0 music concert cancelled