நேருக்கு நேர் மோதி கொண்ட இருசக்கர வாகனங்கள்: 5 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


ஒடிசா, 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஒடிசா, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கேசரி பட்னா என்ற இடத்தில் நேற்றிரவு நடந்த இந்த விபத்தில் 2 இரு சக்கர வாகனங்களிலும் தலா 3 பேர் பயணித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நடந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அஷுரா பந்த் பகுதியைச் சேர்ந்த மனோஜ், ஸ்ரீகாந்த் கௌடா, கோபால்பூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திர நாயக், ஜெயந்த் மற்றும் ரஜனிகவுடா என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாவும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். 

மேலும் உயிர் பிழைத்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bike collided accident 5 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->