ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம் - மத்திய அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம் - மத்திய அரசு அதிரடி.!

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா பிறப்பு மற்றும் இறப்பு சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மத்திய அரசு பிறப்பு சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "வாக்காளர் அடையாள அட்டை பெறவும், ஓட்டுநர் உரிமம் பெறவும் பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம். 

திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். 

ஆகவே, அக்டோபர் 1 முதல் கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழை ஒரே அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

birth certificate use document central government announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->