கர்நாடகா சட்டசபை தேர்தல் || வாக்காளர்களுக்கு இலவச குக்கர் வழங்கிய பாஜக.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, ஆளும் கட்சியான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றது. 

தேர்தலுக்காக, அனைத்து கட்சியினரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையே பிரதமர் மோடியும் கர்நாடகா மாநிலத்திற்கு அடிக்கடி வருகை மேற்கொண்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து, தேர்தல் பொறுப்பாளராக, மத்திய கல்வி, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு கடந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. 

இந்த நிலையில், ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி, முதலமைச்சரானால், "கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்துவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, பாஜக. எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமலிங்கா ரெட்டி உள்ளிட்டோர் நேற்று, தங்களது தொகுதிகளில் வாக்காளர்களுக்கு இலவச குக்கர்களை வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த குக்கர்களின் அட்டைபெட்டியில் தங்களுடைய கட்சியின் சின்னம் மற்றும் அந்த இரு தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp free cooker distributions to peoples for karnataga assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->